முதல்வர் விஜய் அவதூறு வழக்கு : மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு தொடர்பாக மேலும் தகவல்களை சேகரிக்கவும், விசாரணையை தீவிரப்படுத்தவும் காவல் விசாரணை அவசியம் என போலீசார் மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






