--- --:--:-- --

மாணவர்கள் மீது பாயும் போலீஸ் வெறி! ஆட்சியைப் பிடித்ததும் ஆட்டம் கண்டுவிட்டதா விஜய் அரசு? நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் அதிர்ச்சி, அராஜகம்!

stst

டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் போலீஸ் கொடூரத்தை கண்டித்து, சென்னையில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

சென்னை எழும்பூரில், அமைதியான முறையில் நடைபெற்ற இந்த ஆதரவுப் பேரணியில், தமிழக காவல்துறை நடத்திய அராஜக அத்துமீறல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பெண்கள் என்றும் பாராமல் ஆடை கிழிப்பு: கடித்துக் குதறிய கொடூரம்!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்வதாகக் கூறி காவல்துறை நடந்துகொண்ட விதம் மனித உரிமைகளையே கேள்விக்குறியாக்கியுள்ளது.பெண் மாணவர்கள் என்றும் பாராமல் அவர்களின் ஆடைகளைப் பிடித்து இழுத்து மிக மோசமான முறையில் காவல்துறை நடத்தியுள்ளது. கைது நடவடிக்கையின் போது மாணவர்களின் கைகளைக் காவல்துறையினர் கடித்துக் குதறியுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மாணவர்களை இழுத்துச் சென்று தலையைப் பலவந்தமாகத் தரையில் அடித்து அடக்குமுறையைக் கையாண்டுள்ளனர்.

தோள்பட்டை விலகல்:

காவல்துறையினரின் இந்தத் தீவிரமான தாக்குதலால் இரு மாணவர்களுக்குத் தோள்பட்டை (Shoulder Dislocation) விலகி, அவர்களுக்கு தற்போது மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ ஆதாரங்களை மாணவர் அமைப்பினர் தற்போது வெளியிட்டுச் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அரியணையில் ஏற்றியவர்களுக்கே இந்த நிலையா?

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வரை திரண்டு நின்று வாக்களித்ததால்தான் இன்று  விஜய்  முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். ஆனால், அதிகாரத்திற்கு வந்தவுடன் தங்களை நாற்காலியில் உட்கார வைத்த மாணவர் சமூகத்தின் மீதே காவல்துறையை ஏவி விடுவது எந்த விதத்தில் நியாயம்?
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து நடவடிக்கை எடுப்பதே ஒரு ஜனநாயக அரசின் கடமையாகும். அதை விடுத்து, காவல்துறையின் அடக்குமுறையைக் கொண்டு அவர்களின் குரலை ஒடுக்க நினைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.காவல்துறையின் இந்த மிருகத்தனமான தாக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் பயந்து மாணவர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று  மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon