--- --:--:-- --

சேலம் பாராளுமன்ற தொகுதி யாருக்கு வெற்றி வாய்ப்பு.. குற்றம் குற்றமே இதழின் கருத்துக்கணிப்பு..?

24

ந்தியாவின் முதல் மாவட்டம் சேலம். தமிழகத்தை பொறுத்த வரை எந்த கட்சியாக இருந்தாலும் கோஷ்டி பூசலிலும் முதல் மாவட்டம் சேலம். மாம்பழம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சேலம். அப்படிப்பட்ட சேலத்தில் வெள்ளிக்கொலுசு, ஜவுளி, கைத்தறி, ஜவ்வரிசி தொழில் என பல்வேறு தொழில்கள் சேலத்தின் அடையாளமாக காணப்படுகிறது. எஃகு உற்பத்தி, அனல் மின் உற்பத்தி என இரண்டையும் தன்னகத்தே கொண்ட மாவட்டம் சேலம் தான். சேலம் மாவட்டத்தை பொருத்த வரை 11 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு ,ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி என 6 சட்டசபை தொகுதிகளை கொண்டது.

 

சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரை 6 முறை காங்கிரஸ்சும், 4 முறை தி.மு.க.வும், 4 முறை அ.தி.மு.க.வும் , ஒரு முறை த.மா.கா வும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளார்கள். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு ஜாதிகளை சார்ந்த வாக்காளர்கள் பரவலாக இருக்கின்றனர். ஆனால் வன்னியர் சமுதாயத்தை சார்ந்த வாக்காளர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர். அவர்களின் ஓட்டு வங்கி ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது. கடந்த பல தேர்தலின் வேட்பாளர்களின் வெற்றி, தோல்விகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இதன் சூட்சமம் தெளிவாக தெரியும்.

 

சேலம் என்றாலே மாம்பழம் தான் என்ற நிலை மாறி தற்போது சேலம் என்றாலே மேம்பாலம் தான் என்று சொல்லும் அளவிற்க்கு மேம்பால நகரம் என்ற பெயற் பெற்று விட்டது. கடந்த திமுக ஆட்சியில் தான் சேலத்தில் பிரமாண்டமான பாலங்கள் கட்ட பட்டாலும் காசுக்காக பல்வேறு பாலங்களை முறையாக கட்டாமல் சிலரின் தேவைக்காக குறுக்கி, மாற்றி கட்டி விட்டனர் என்று இன்றும் பொது மக்கள் பலர் புலம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நீண்ட இரட்டை பாலம் பொது மக்களின் தேவையறிந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்கள். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்கு கீழ் சேலம் பல்வேறு உட்கட்டமைப்புகள் சிறப்பாக நடைபெற்று சென்னை, கோவைக்கு இணையாக அனைத்து துறைகளிலும் சேலம் மிகவும் வளர்ந்து வருகிறது.

 

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சேலம் வடக்கு 2,67,722, சேலம் தெற்கு 2,49,924, சேலம் மேற்கு 2,98,347, ஓமலூர் 2,93,597, எடப்பாடி 2,82,892, வீரபாண்டி 2,56,429 என 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 8,23,336. பெண் வாக்காளர்கள் 8,25,354, மூன்றாம் பாலினத்தினர் 221 உள்ளனர்.

 

மக்களின் கோரிக்கைகள்

 

சேலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சீலநாயக்கன் பட்டி மேம்பாலம் இருவழிப் பாதையாக அமைக்க வேண்டும். சேலத்தை சுற்றி புற வழிச்சாலை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும். பல கோடி முதலீடு செய்த பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல் படுத்த வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும். காவிரி உப நீர் திட்டத்தை முறையாக செயல் படுத்தி திருமணி முத்தாறு, சரபங்கநதியை மீட்டெடுக்க வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரவேண்டும்.

 

திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் கலக்காமல் பாதுகாத்து, சுத்தம் செய்ய வேண்டும்., மலைகள் மற்றும் மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முறையாக பயன் படுத்த வேண்டும். சேலம் முதல் விருதாச்சலம் வரை செல்லும் பயணிகள் ரெயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும். சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பகலில் ரயில் சேவையை தொடங்க வேண்டும்.

 

சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் ரெயில்கள் இயக்க வேண்டும். கருப்பூரில் இருந்து ஜங்ஷன், புதிய பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் வரையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க வேண்டும். கருப்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மூட வேண்டும். ஜாகீர்அம்மா பாளையம் தகவல் தொழில்நுட்ப பூங்காவை மேம்படுத்த வேண்டும்.

 

புதிய தொழிற்சாலைகளை தொடங்கி உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சேலம் விமான நிலையத்தில் இருந்து பல முக்கிய இடங்களுக்கு விமான சேவை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சேலம் மாவட்ட மக்களிடையை பல ஆண்டு காலமாக நிலவி வருகிறது.

 

மறைந்த முன்னால் வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்த காலத்தில் சேலம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக திகழ்ந்தது. அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மற்றும் ஆட்சிமாற்றத்தால் 2011, 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக உள்ளது. திமுக ஆளுங்கட்சியாக இருந்தும் அரசு அதிகாரிகள் திமுகவினரின் பேச்சை கேட்கவில்லை என்று வெளிப்படையாக கட்சிகாரர்கள் புலம்பிய பல்வேறு சம்பவங்களும் சேலம் மாவட்டத்தில் இதற்கு முன் கண்டோம்.

 

திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி

 

இரண்டு சட்ட மன்ற தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றாலும் 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் இந்த முறையும் தி.மு.க. போட்டியிட முடிவு செய்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதியை வேட்பாளராக நிறுத்தி உள்ளார்கள். இந்த முறை சேலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் செல்வகணபதி தான் பிரபலமானவர். சுடுகாட்டு ஊழல் செல்வகணபதி என்றால் சேலத்தில் தெரியாத ஆட்களே இல்லை என்ற அளவிற்க்கு பிரபலமானவர்.

 

வண்ண தொலைகாட்சி பெட்டி வழக்கு முதல் நிதி மோசடி வழக்கு வரை எல்லாவற்றையும் பார்த்தவர். ஊழலுக்காக நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் தமிழக அரசியல்வாதி என்ற பெருமையை பெற்றவர். இந்த ஒரு வாய்ப்பிற்காக 2008 முதல் திமுகவில் பல்வேறு இன்னல்களையும், சம்பட்டி அடிகளையும் பொறுத்திருந்து இந்த வேட்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். இந்த கோர பசியானது இவர் ஒரு வேலை தேர்தலில் வெற்றி பெற்றால் அதற்க்குண்டான தீனி பல மடங்கு இருக்கும் என்று கட்சி தொண்டர்கள் காற்று வாக்கில் பேசிக் கொள்கின்றனர்.

 

 

உணர்ச்சி மிகு உரையின் உதவா தன்மையை உணர்ந்த இளைஞர்கள் வெளியேறியதால் இன்று கட்சி கலை இழந்து காணப்படுகிறது.

 

அ.தி.மு.க. சார்பில் விக்னேஷ் (அ.தி.மு.க.)

 

அதிமுக பொருத்த வரை ஓமலூரை சேர்ந்த விக்னேஷ் புது முகமாக களத்தில் நட்டாற்றில் இறக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளராக உள்ளார். வேட்பாளர் விக்னேஷ் அப்பா பரமசிவத்தை கூட ஓமலூர் வரை தெரிந்திருக்கிறது. ஆனால் விக்னேஷ் வேட்பாளராக அறிவிக்க படுவதற்க்கு முன்பு வரை கட்சிகாரர்களுக்கே அவர் யார் என்று தெரியாது. Money & மணி ஆசியுடன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் புது முகங்களை தைரியமாக களம் இறக்கிய எடப்பாடி பழனிச்சாமி என்ற கட்சிகாரர்கள் பெறுமையாக கூறிக் கொண்டாலும், உனக்கு 20 எனக்கு 18 என்று ஆளுங்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டது போல் வேட்பாளர் தேர்வு நடந்திருக்கிறது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இவர்களின் பிரச்சார உக்திகளும் இதனை பிரதி பலிப்பதாகவே இருக்கிறது.

அண்ணாதுரை (பா.ம.க.)

 

பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.சார்பில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான அண்ணா துரை களம் இறக்க பட்டுள்ளார். எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் சேலத்தில் நாம்ம தான் போட்டியிட வேண்டும் என்ற ரேசில் இருந்த பல வேட்பாளர்களை தாண்டி அண்ணாதுரைக்கு சீட்டு வழங்க பட்டுள்ளது. கட்சிகாரர்களுக்கு பரிச்சயமான நபராக இருந்தாலும், இளம்பிள்ளையை தாண்டினால் இங்குட்டு பொதுமக்களுக்கு யாருக்கும் தெரியாத வேட்பாளராகவே உள்ளார். இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொது மக்களின் எதிர் பார்ப்பிற்க்கு ஏற்றவாறு இந்த கூட்டணி அமைந்திருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு பின் சேலத்தில் பாஜகவின் வளர்ச்சியும், எந்த கட்சியா இருந்தா என்ன நம்ம சாதிக்காரன் நிற்க்கிறான் என்ற பாமகவை சார்ந்த சாதி ஓட்டுகளும், இவங்களுக்கும் 38 கொடுத்ததச்சு, அவர்களுக்கும் 38 கொடுத்தாச்சு ஆன தமிழ மக்களுக்கு இரண்டு கட்சியும் ஒன்றும் செய்யவில்லை என்ற பொதுமக்களின் நிலைப்பாடும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

 

யார் என்ன சொன்னால் என்ன அதிமுக பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமியோ தன் சொந்த மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று தான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யும் வேட்பாளரை களம் இறக்கியுள்ளதாக கூறுகிறார்கள். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 6 க்கு 5 சட்ட மன்ற தொகுதிகளை நாம் தான் வெற்றி பெற்று இருக்கிறோம் நாடாளுமன்றத்தையும் நாம் தான் கைப்பற்ற வேண்டும் என்று கவனமுடன் செயலாற்றுகிறார். திமுக பொறுத்தவரை மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் கோட்டை விட்டால் மாவட்ட செயலாளர் பதவி போய்விடும் என்ற பயத்திலும், வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் தேசிய கொடி வைத்த வாகனத்தில் கோட்டைக்கு செல்லலாம் என்ற ஆசையிலும் வேலை செய்து வருகிறார். பாமக பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமியையே எதிர்த்து கனிசமான வாக்கு வாங்கிய வேட்பாளர். நம்ம ஆளுங்க ஓட்டு தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அது எப்படியும் நமக்கு வந்து விடும்.பொதுமக்களுக்கு சொன்ன பல வாக்குறுதிகளை சேலம் மக்களுக்கு இரண்டு கட்சிகளுமே செய்யவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கி கொள்ள வேண்டும் என்றும் ஆயத்தமாகி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் பொறுத்தவரை ஏதாவது மாற்றம் வருமா என்று ஏங்கி தவிக்கின்றனர். புதுசா ஒருத்தர அந்த நாற்காலியில உட்காரவைச்சு பார்த்தா தான் என்ன என்ற முடிவிற்க்கு வந்து விட்டனர்.

 

கோடைவெயிலில் சூரியன் மேல் உள்ள கோபத்திலும், சூரியனுடன் இணைந்து இலையும் நிழல் தரவில்லை என்ற வெறுப்பிலும், இந்த சூழ்நிலையில் மாம்பலம் தான் இதமாக இருக்கின்றது என்று பொதுமக்கள் நினைக்கின்றனரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Right Menu Icon