வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு..! காரணம் யார்?
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வெள்ளை மாளிகையின் அருகே பாதுகாப்பு வீரர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தகவல் டிரம்ப்பிடம் தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் இருந்து அவர் உடனடியாக வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களிடம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது குறித்து பேசிய டிரம்ப் உலகம் எப்போதும் ஆபத்தான சூழலில் உள்ளதாக கூறினார்.
வெள்ளை மாளிகை முன்பு பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய நபர் மீது பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்று இதுவரை வெளியாகவில்லை. துப்பாக்கிச்சூடை அடுத்து வெள்ளை மாளிகை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.







