சேற்றிலிருந்து டிராக்டரை எடுக்க முயற்சித்த போது டிராக்டர் தலைகுப்புற விழுந்து விவசாயி பலி..!
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே விவசாய நிலத்தில் உழவு பணி மேற்கொண்டபோது சேற்றில் சிக்கிய டிராக்டரை வெளியே எடுக்க முயன்ற விவசாயி டிராக்டர் தலைகுப்புற விழுந்து உயிரிழந்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவின் கடப்பா மாவட்டம் மயிலவரம் அருகே உள்ள வென்சுர்லா கிராமத்தில் சஞ்சீவ கர்ணா எனும் விவசாயி தனது சொந்த நிலத்தில் டிராக்டர் மூலம் உளவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ட்ராக்டர் சேற்றில் சிக்கிக் கொண்ட நிலையில் அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் சேற்றிலிருந்து வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அதிவேகமாக ஆக்சிலேட்டரை கொடுத்ததால் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் மாட்டிக் கொண்ட விவசாயி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.







