--- --:--:-- --

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பெண்..!

10

புதுச்சேரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது பூர்வீக நிலத்தின் அருகே இடங்களை ஆக்ரமித்து கட்டியுள்ளார் எனவும் தனது நிலத்தை மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

 

இதை விசாரித்த புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்றம் ஊழியர்கள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் நேரில் சென்று நீதிமன்ற உத்தரவை காட்டி ஆக்கிரமிப்புகளை எடுக்க முயன்றனர்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் பெண்ணொருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு வீடுகளை இடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பு விடுவித்தனர்.

 

Right Menu Icon