தரைப்பாலத்தில் தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸை மீட்ட பொது மக்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேசுபள்ளியில் உள்ள தரை பாலத்தை தாண்டி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியது. கனமழை காரணமாக அங்கு உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கிருந்த பொதுமக்கள் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டு அனுப்பி வைத்தனர்.






