காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை சரமாரியாக வெட்டிய காதலன்..!
சென்னையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை சரமாரியாக வெட்டிய காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 16 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். பெண்ணின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
காயமடைந்தவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் நண்பர்கள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.






