புதிய தனியுரிமைக் கொள்கையை திரும்பப் பெறுமாறு வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு அறிக்கை..!
புதிய தனியுரிமைக் கொள்கையை திரும்பப் பெறுமாறு வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு கூறியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் செயலியை வாங்கியது. இதையடுத்து இந்த மாதம் 15ஆம் தேதி முதல் புதிய தனியுரிமைக் கொள்கையை இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வணிகரீதியான வாட்ஸ்அப் உரையாடல்களின் பதிவுகள் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் வசம் அளிக்கப்படுகின்றன.
இந்த புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்காதவர்களின் வாட்ஸ்அப்கள் சிறிது காலத்தில் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் புதிய தனியுரிமைக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளது.
ஐரோப்பாவிலுள்ள பயனாளர்களுக்கு இந்திய பயனாளர்களுக்கும் இடையே வாட்ஸ்அப் நிறுவனம் இருவேறு கொள்கைகளை பின்பற்றுவதாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. வாட்ஸ்அப் இன் புதிய கொள்கை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைக்கு விரோதமாக இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.




