தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும்?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதால் இனி தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதிகளின் ஒருசில இடங்களில் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் 2-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது.
ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரை நேற்று தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (18.06.2025) காலை 05.30 மணி அளவில் மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஜார்க்கண்ட் வழியாக நகரக்கூடும்.நேற்று குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் மத்திய ராஜஸ்தான் பகுதிகளில் நிலவுகிறது. 18.06.2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 19.06.2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.





