--- --:--:-- --

விமான நிலையம் அருகே தீ விபத்து.. பரபரப்பு..!

4

துரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் இன்று திடீரென ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் குப்பைக் கிடங்குடன் விவசாய நிலமும் உள்ள நிலையில், காய்ந்த புற்கள் திடீரென தீப்பற்றியதால் தீ அருகிலிருந்த வயல்களுக்கு பரவியது. இதனால் அந்த பகுதியில் தடுமாறும் வகையில் புகை மூட்டம் காணப்படுகிறது.

 

உடனடியாக தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகிலேயே விமான நிலையம் உள்ளதால், விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்த புகை பரப்பை ஏற்படுத்தி அந்தப்பகுதியில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தீ விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon