--- --:--:-- --

நடிகர் விவேக் மரணத்திற்கான காரணம் என்ன..?

8

டிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மரணமடைந்தார்.

 

முன்னதாக அவர் கொரொனா தடுப்பு ஊசி செலுத்தி இருந்த நிலையில் அவரது மரணம் பல சர்ச்சைக்குள்ளானது. உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணமாக இருந்தது என பலர் கூறிவந்தனர். விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்தார்.

 

இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே மிக விரைவில் சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சுகாதாரத் துறை அளிக்கும் பதிலை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon