--- --:--:-- --

பீகாரில் என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்த மாட்டோம்

1

பாஜக ஆதரவுடன் ஆட்சி நடைபெறும் பீகாரில் என்‌ஆர்‌சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைபடுத்த போவதில்லை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிஏ‌ஏ என் ஆர் சி உள்ளிட்டவை குறித்த பிகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்ரீ யாதவ் ஒத்திகை தீர்மானம் கொண்டுவந்தார்.

 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் என்பிஆர் எனப்படும் மக்கள் தொகை பதிவேட்டில் சர்ச்சைக்குரிய பிரிவுகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக கூறினார். 2010ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட வரி மக்கள் தொகை பதிவேடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

 

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் அறிவுறுத்தலின் பேரில் பீகார் மாநிலத்திற்கு என்‌ஆர்‌சி தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 54 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

தீர்மானம் நிறைவேற்றப்படும் முன் பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் 2010ஆம் ஆண்டில் இருந்த வடிவத்தை போலவே பின்பற்றப் போவதாக உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

பிஹாரில் என்‌ஆர்‌சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை இல்லை என்றும் இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்க பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார். பாஜக ஆதரவுடன் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் முதல் முறையாக தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon