--- --:--:-- --

மாப்பிள்ளை தாடி வைத்திருந்தால் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம் – மக்கள்

5

மாப்பிள்ளை தாடி வைத்திருந்தால் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம் என கடலூர் மக்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் திருமணம் என்றால் மாப்பிள்ளைகள் கிளீன் ஷேவ் செய்து வருவார்கள். காலமாற்றத்தால் லேசாக தாடி வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி போனது.

 

கொரோனா காரணமாக ஷேவ் செய்வதையே பலரும் மறந்து விட்டனர். கொரோனா காலத்தில் நடைபெற்ற பல திருமணங்களில் மணமகன் தாடியுடன் தான் காணப்பட்டார். தொடர்ந்து தாடியுடன் திருமணம் செய்தது பாப்புலர் ஆகிப்போனது.

 

இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் காரைக்கால் மேடு மீனவ கிராமங்கள் ஒன்று கூடி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளனர். திருமணத்தின்போது மாப்பிள்ளை தாடி வைத்திருந்தால் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்த முடிவு காரைக்கால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் இந்த முடிவு தொடர்ந்து அமலுக்கு வரும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Leave a Reply

Right Menu Icon