ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரில்16 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய பெங்களூரு அணி வீரர் 51 பந்துகளில் சதம் விளாசினார். விராட் கோலி 72 ரன்களுடன் களத்தில் இருந்தார்.






