அரசு ஊழியர்களை நாங்கள் சிறையில் அடைக்கவில்லை: ஸ்டாலின்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை நாங்கள் சிறையில் அடைக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு எதிராக டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியை போல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நாங்கள் இரவோடு இரவாக கைது செய்யவில்லை.
அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்தன. அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்துவிட மாட்டார்கள். அரசு ஊழியர்கள் மீது அதிமக ஆட்சியில் ஏன் அக்கறை காட்டவில்லை?. என சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ தங்கமணியின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்.






