தோனி இருக்கும் போது அணி குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை..!
தலைவன் தோனி இருக்கும் போது அணி குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது. துபாயில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் காண்கின்றன.
சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் தொடரிலிருந்து சொந்த காரணங்கள் காரணமாக விலகியுள்ளனர். இந்த நிலையில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட 13 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக இன்னும் பயிற்சியை தொடங்க வில்லை.
சிஎஸ்கே குறித்து அதன் சிஇஓ காசிவிஸ்வநாதன் பேசியுள்ளார். அதில் சிஎஸ்கே பலமாகவே உள்ளது. அது குறித்து தங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நம் அணியில் திறமையான கேப்டன் இருக்கிறார். இது போன்ற பல கடினமான நேரங்களை அவர் ஏற்கனவே எதிர்கொண்டவர்.
தலைவன் தோனி அணியை பார்த்துக்கொள்வார். நேற்றிலிருந்து நாங்கள் பயிற்சியும் தொடங்கி விட்டோம் என்றார். மேலும் பேசியவர் அணியின் அனைத்து வீரர்களும் துடிப்புடன் இருக்கிறார்கள். சீரான நாட்களில் அனைத்து வீரர்களுடன் ஜூம் கால் மூலம் சந்தித்து உரையாடினோம். கேப்டன் பயிற்சியாளர்களுடன் தங்கள் எண்ணங்களை பகிர்ந்தார்கள்.
இந்த ஆண்டு நிச்சயம் சிஎஸ்கே சிறப்பாக விளையாடும். விரைவில் நாடு முழுவதும், துபாயிலும் சிஎஸ்கேவின் மஞ்சள் நிறம் பற்றிக்கொள்ளும். எப்போதும் போல இந்த ஆண்டும் சிஎஸ்கே ரசிகர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் காசி விஸ்வநாதன்.







