திமுக நிர்வாகியை கொன்றவரின் தந்தை கொலை – பழிக்குப்பழியா?
சிவகங்கை, சாமியார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கருப்பையாவின் மகன் விக்கி என்ற கருணாகரன் திமுக நிர்வாகி பிரவீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கருணாகரனின் தந்தை கருப்பையா, ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழிக்குப்பழியாக கொலையா? என்ற கோணத்தில் சிவகங்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





