--- --:--:-- --

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவு..!

2

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகததால் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

 

சேலம் மாவட்டம் சந்தையூர் ஆட்டையாம்பட்டி கிராம பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றும் மூர்த்தி என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

 

கடந்த 2017 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை வேறு இடத்தில் பணியமர்த்துவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை அமல்படுத்த கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்க தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

 

Right Menu Icon