--- --:--:-- --

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியானது..!

1

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குரூப் 2, 2ஏ பணிகளில் உள்ள 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

 

இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 14ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 5,81,305 பேர் எழுதினர். இந்த நிலையில் குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

 

பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகள் சரியான விடை ‘டிக்’ குறியீடு மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

 

இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விவரங்களை உரிய சான்றுகளுடன் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி வலைத்தளம் வழியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்கள் மறுப்பை தெரிவிக்க வேண்டும்.

 

தபால் வழியாகவோ அல்லது இ-மெயில் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Right Menu Icon