நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகள்..!
அமைச்சர் உதயநிதி மற்றும் சாம்சங் நிறுவனம் மீதான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கியமான வழக்குகள் அமைச்சர் உதயநிதி மீது பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பொள்ளாச்சி ஜெயராமன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் வரும் 11ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அண்ணா நகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரமும் வழக்கின் விசாரணைக்கு வருகிறது.






