ஒமிக்ரானை விட வேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை..!
புதிய வகை கொரொனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரொனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் அனைத்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இதற்கிடையே ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று ஓமிக்ரானை விட அதிகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழுவுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஆலோசனை மேற்கொண்டார். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.





