--- --:--:-- --

உக்ரைன் குழந்தையின் வைரல் புகைப்படம்..!

4

க்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையால் அந்நாடு ஈடுகட்ட முடியாத சேதங்களை சந்தித்து வருகிறது. உயிர்களை இழந்து வருகிறது. ரஷ்யப் படைகள் இனப்படுகொலை நடத்தி வருவதாகவும் அதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

 

இந்நிலையில் ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் குழந்தைகளை பாதுகாக்க உக்ரேனிய பெற்றோர் செய்யும் செயல் உறைய வைத்துள்ளது. போர் தீவிரமடைந்து வருவதால் தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுத தொடங்கியுள்ளனர்.

 

உக்ரைனிய பெற்றோர் ட்விட்டரில், உக்ரேனில் பாதிக்கப்பட்ட ஒருவரின் இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளின் உடல்களில் தங்கள் தனிப்பட்ட விவரங்களை எழுதுகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்.

 

குழந்தைகளின் உடல்களில் தங்கள் குடும்ப உறவினர்களின் தகவல்களை எழுதி வருகிறார்கள். அவர்கள் குழந்தை உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இதுபோன்று செய்து வருகின்றனர்.

 

மற்றொரு செய்தி நிறுவனம் ரஷ்யப் படைகளிடமிருந்து தப்பி செல்ல முயன்ற குழந்தைகளை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.

 

Right Menu Icon