விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,926 ஆண் வாக்காளர்களும். 1,20,40 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் என மொத்தம் 2,37,31 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க வசதியாக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 662 வாக்குப்பதிவு இயந்திரமும் , 330 கட்டுப்பாட்டு கருவியும் , 357 வாக்கினை உறுதி செய்யும் கருவியான VVPAT என மொத்தம் 1349 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 276 வாக்குச்சாவடி மையங்களில் 3 மிகவும் பதட்டமானவை என்றும், 42 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக 220 மத்திய துணை ரானுவப்படையினர் உள்பட 2651 காவலர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்கானிக்க 53 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தேர்தல் பணியில் 1355 அலுவலர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர்.





