--- --:--:-- --

கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல்..!

10

ள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக, கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வடதொரசலூர் கிராமத்தில் சிலருக்கு காய்ச்சல் இருந்து வந்தது.

 

இதில், 7 வயது சிறுவன் குபேரன், சுபானி, வெற்றிவேல், பிரபாவதி, கலைவாணன் மற்றும் திவ்யா ஆகியோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டது, தெரியவந்ததையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 

இதனிடையே, தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர், கடந்த 3 ஆம் தேதி மருத்துவ முகாமிட்டு, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேர் உள்பட 10 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.அதில், 7 பேர் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியானது.

 

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Right Menu Icon