--- --:--:-- --

விஜய்யின் பேச்சு பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது – தொண்டர்கள்

1

வெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு குறித்து அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விஜய்யின் பேச்சு பெரிய நம்பிக்கையை விதைத்திருப்பதாகவும், தொடர்ந்து அவர் சொல்படியே நடப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்காக அதிகாலை முதலே அலைகடல் போல திரண்ட தொண்டர்கள் படை, விஜய் பேசி முடிக்கும் வரை வெயிலையும் பொருட்படுத்தாது காத்திருந்தனர். விஜய் உரை முடிந்து நிகழ்ச்சி நிறைவுபெற்றதும் தொண்டர்கள் மெல்ல மெல்ல அங்கிருந்து புறப்பட்டனர்.

 

தொண்டர்கள் பல கிலோ மீட்டர்கள் நடந்தே பயணித்தனர்.விஜய்யை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்திருந்த தொண்டர்கள், அவரை பார்த்ததுடன் அவரது பேச்சையும் கேட்டது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்தனர். அத்துடன், மிக ஒழுக்கமாகவும் பெண்களுக்கு மிக பாதுகாப்பாகவும் மாநாடு நடந்ததாக இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

 

அதேபோல், தவெக மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதவர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பலர் வருகை தந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Right Menu Icon