சொகுசு காரில் வந்து பூந்தொட்டியை திருடிய பெண்..!
சொகுசு காரில் வந்து கடையின் முன்னே இருந்த பூந்தொட்டியை திருடி சென்ற பெண்ணை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கடையில் வந்து நின்ற பிஎம்டபிள்யூ காரில் இருந்து பெண் ஒருவர் இறங்கினார்.
பின்னர் கடையின் படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த அழகான பூந்தொட்டி ஒன்றை தன் கையில் எடுத்துச் சென்று காரில் வைத்தார். காரில் இருந்த மற்றொரு நபர் அவருக்கு உதவி செய்தார். உடனடியாக அந்த கார் அங்கிருந்து வேகமாக சென்றது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் எங்கு போனாலும் சிலரின் குணம் மாறுவதில்லை. பணக்கார கொள்ளை என அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.





