தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள விஜயகாந்த்..!
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் மூலம் அனைத்து கதிரியக்க பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2ஆம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






