--- --:--:-- --

கட்சி தொடங்கிய பிறகு முதல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய்..!

1

ரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பிறகு, விஜய் இன்னும் பொது நிகழ்வு எதிலும் கலந்து கொள்ளவில்லை.

 

அரசியல் நிகழ்வுகள், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வரும் என்ற தகவல் வெளியான போது அது குறித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை இருவிதமான விமர்சனங்களை பெற்றாலும், தன்னுடைய நிலைப்பாட்டை அந்த அறிக்கையின் மூலம் கூறியிருந்தார்.

 

சி.ஏ.ஏ குறித்து மட்டும் கருத்து தெரிவித்திருந்த விஜய், மற்ற எந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் பேசவில்லை. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளார்.

 

இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு போல் இல்லாமல், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 28ஆம் தேதி கோவை, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார்.

 

அதற்குப் பிறகு ஜூலை மூன்றாம் தேதி மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்க உள்ளார். கடந்த ஆண்டு சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் மேடையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தவிர்க்கும் வகையில் இந்த முறை இரண்டு கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் விழாவை விஜய் நடத்துகிறார்.

 

Right Menu Icon