பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தணிக்கும் வீடியோ..!
பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சை தான் கக்கும் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க நல்ல பாம்பு ஒன்றுக்கு வனத்துறை அதிகாரி ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ 3 வருடங்கள் கழித்து சமூகவலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பாம்பின் தாகத்தை போக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரி ஒருவர் தரையில் அமர்ந்து பாம்பின் முன் தண்ணீர் பாட்டிலை நீட்டுகிறார். செய்வதறியாது நின்ற அந்த பாம்புக்கு தனது கையால் தண்ணீர் குடிக்கும் படி வனத்துறை அதிகாரி கூறுகிறார்.
தொடர்ந்து பாம்பு தண்ணீர் குடிக்கும் வகையில் அதன் தலையை வனத்துறை அதிகாரி சாய்க்க தாகத்தில் இருந்த பாம்பு தண்ணீரை குடிக்க தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்தாநந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த பிறகு பெருமளவில் லைக்குகளைப் பெற்று வருகிறது.






