போலி என்கவுண்டரில் மகனை கொல்ல வாய்ப்பு உள்ளதாக தாய் வழக்கு..!
மகனைப் போலி என்கவுண்டரில் கொல்ல வாய்ப்பு இருப்பதால் அதில் இருந்து பாதுகாக்க உத்தரவிட கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக காவல்துறை தலைவர் மற்றும் நெல்லை மாவட்ட சிறைத்துறை தலைவர் மற்றும் நெல்லை மாவட்ட சிறை துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் உள்ள ரகுவரன் என்ற கைதி தன்னை கர்நாடக சிறைக்கு மாற்றும் போது என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தனது வழக்கறிஞரிடம் தெரிவித்ததன் பேரில் அவரது தாய் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மகனின் நண்பர் கர்நாடக காவல் துறையால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் தனது மகனை போலி என்கவுண்டர் செய்வதிலிருந்து பாதுகாப்பு தரும்படி உத்தரவிடக் கோரியிருந்தார்.
இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவர் மற்றும் நெல்லை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.






