5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர்..!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளர் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாலதண்டாயுதம் என்பவர் கிராம ஊராட்சி மேலாளராக இருந்து வருகிறார்.
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான வங்கி கணக்குகளில் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்ற அதிகாரிகள் ஒப்புதல் தேவை என்பதால் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரிடமும் தலா 5 ஆயிரம் ரூபாயை கிராம ஊராட்சி மேலாளர் பாலதண்டாயுதம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.
இதனை செம்பொன்குடி ஊராட்சி மன்ற தலைவர் கமல்நாத் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.






