தனது தந்தை செயற்கை சுவாசத்தில் உள்ளதாக எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ…!
கடந்த வாரம் ஐந்தாம் தேதி கொரொனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலையை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அவரது மகன் எஸ்பிபி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது தந்தைக்கு செயற்கை சுவாசம் எடுக்கப்பட்டு விட்டது என்று வதந்தி வருவதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மக்கள் பிரார்த்தனை செய்வதே தந்தை மீண்டு வர அவருக்கு செய்யும் நன்மை எனவும் குறிப்பிட்டுள்ளார்.







