ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜன நாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சென்சார் பிரச்சினை காரணமாக படம் குறித்த தேதியில் வெளியாகவில்லை. சென்சார் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. பின்னர் சென்சார் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே நடிகர் விஜய், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்து தமிழக முதல்வரானார். தொடர்ந்து ‘ஜன நாயகன்’ படத்துக்கு கடந்த வாரம் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதன் படி ‘A” சான்றிதழை பெற்றது ஜனநாயகன் திரைப்படம். இந்நிலையில், இந்தப் படம் வரும் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.






