மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு..!
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராஜமலை பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவு மீட்புப் பணி பன்னிரெண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. ஆற்றங்கரையோரம் குடியிருந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதால் மோப்ப நாய் உதவியுடன் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மண்ணில் மேலும் யாரும் புதையுண்டார்களா என்பதனை ரேடார் கருவிகள் மூலம் நாளை முதல் சோதனையிட உள்ளதாக மீட்புப்படையினர் கூறியிருக்கிறார்கள்.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூணாறு பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன.







