சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் முருகன் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக கடந்த ஆறாம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இரு முறை ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி நசீமா பானு முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடைபெற்றது.
அப்போது முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வர உள்ளதால் முதன்மை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.







