பால் பண்ணை தொட்டியில் ஓட்டுநர் சடலம்.. வெளியான வீடியோ காட்சி..!
திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் உள்ள பால்பண்ணையில் ஓட்டுநராக வேலை செய்யும் நபர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பால்சாமி என்பவரின் பண்ணையில் வேலை செய்யும் நபர் கடந்த 18ஆம் தேதி வேலைக்கு சென்று இரவு நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மனைவி பாக்கியலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மாரிச்சாமியை தேடிய போலீசார் நள்ளிரவில் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்டனர். விசாரணையில் பண்ணையில் வேலை செய்யும் சிறுவனை மாரிச்சாமி அடிக்கடி அடித்ததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
அந்த சிறுவனையும் அவனது நண்பனையும் கைது செய்த போலீசார் தலைமறைவான மேலும் இரண்டு சிறுவர்களை சிசிடிவி பதிவின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.





