அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செய்யும் கொடுமைகள்..!
திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்களே மேசைகளை தூக்கிச் செல்லும் காட்சிகள் செய்தியாளர்கள் பதிவு செய்ய கூடாது என்று கூறிய ஆசிரியர்கள் கூறியதால் பெரும் பதற்றம் நிலவியது.
திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்த இருக்கைகள் மாணவர்களை எடுத்துச் சென்றனர். அங்கிருந்த காட்சிகளை அங்கிருந்து செய்தியாளர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்ததால் அதனை கண்டித்து ஆசிரியர்கள் இந்த வீடியோவை எடுக்க வேண்டாம் என கூறி தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





