மூத்த நடிகை காலமானார்..!
மலையாளத்தில் மீசை மாதவன், நந்தனம் உள்பட சுமார் 200 படங்களிலும், 20 நாடகங்களிலும் நடித்திருப்பவர் மீனா கணேஷ் (81). பழம்பெரும் தமிழ் நடிகரான கேசவனின் மகளான இவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பாலக்காடு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு மாரடைப்பு ஏற்படவே காலமானார். மீனா கணேஷின் கணவர் கணேஷ் திரைப்பட டைரக்டர் ஆவார். மகன் மனோஜ் கணேஷ் சீரியல் டைரக்டர்.






