வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிந்தது…!திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம்!!
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் இன்று புதிய மாவட்டங்களாக உதயமாகின.
தமிழகத்தில் பெரிய மாவட்டங்களை பிரித்து, 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி நெல்லை மாவட்டம் 2 – ஆக பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கம் பெற்றது.இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 17-ந் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த 26-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது.
வேலூர் மாவட்டத்தை 3 ஆகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.காலை 10.30 மணிக்கு திருப்பத்தூர் டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நண்பகல் 12.30 மணிக்கு ராணிப்பேட்டை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மற்றொரு விழாவிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.





