தாராபுரத்தில் காய்கறி தள்ளு வண்டிக்கு தீ..!
தாராபுரம் 4வது வார்டு பகுதியில் குடியிருக்கும் ராஜு சந்திரா தம்பதியினர். இவர்கள் காய்கறி தள்ளுவண்டி வைத்து, வியாபாரம் செய்து வருகின்றார். தினமும் வியாபாரம் முடித்து, இவரது வீட்டின் முன்பு, பாதுகாப்புடன் காய்கறி வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
வழக்கம்போல் வண்டியை எடுக்க சென்றபோது, வண்டி முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





