மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வீரபாண்டி ராஜா..!
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
திமுகவின் மூத்த முன்னோடியான வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் தான் ராஜா. சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரித்து வீரபாண்டி ராஜாவுக்கு மாவட்டபொறுப்பாளர் பதவி வழங்கினார் ஸ்டாலின்.
அவர் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவித்து திரும்பிய போது மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.




