லக்ஷ்மி ராமகிரிஷ்ணனுடன் கடும் சண்டையில் ஈடுபடும் வனிதா..!
நடிகையான வனிதா விஜயகுமார் கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவியான எலிசபெத் தனது கணவர் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்த செய்தியை அறிந்த ஒரு தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விவாகரத்து வாங்காமல் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அப்பொழுது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தக்க பதிலடி கொடுத்த வனிதா இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இது உங்களுடைய ஷோ ஒன்றும் கிடையாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வனிதாவும், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனியார் இணைய ஊடகம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் வீட்டில் இருந்தபடியே கலந்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டது சர்ச்சையானது.இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது .






