செல்போன் லைட் வெளிச்சத்தின் மூலம் மக்களுக்கு தடுப்பூசி..!
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள தடுப்பூசி மையத்தில் முறையான மின்விளக்கு வசதி இல்லாததால் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தடுப்பூசியை போட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் நாள் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதனால் அனைத்து பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தடுப்பூசி வர தாமதம் ஏற்பட்டதால் பணி மாலை 5 மணிக்கு மேல் தொடங்கியதாக கூறப்படுகிறது .இந்த நிலையில் பள்ளியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் சுகாதாரத்துறை ஊழியர்கள் செல்போன் மூலம் செலுத்தும் பணியை தொடங்கினார். இதனால் அதிகாரிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.







