--- --:--:-- --

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்..!

1

குழந்தை ஒன்றை தாயார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்த சம்பவம் ஒன்றரை மாதங்களுக்கு முன் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

 

பெண் ஒருவர் குழந்தையை இரக்கமின்றி தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வரும்பரவியது. இதுகுறித்த விசாரணையில் அந்த பெண் விழுப்புரம் மாவட்டம் கோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசி என்பது தெரியவந்தது.

 

இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதனால் துளசியை ஆந்திராவில் உள்ள தாய் வீட்டில் விட்டுவிட்டு வந்த வடிவழகன் வீட்டில் இருந்த அவரது கைபேசியை எடுத்து பார்த்து இருக்கிறார்.

 

அதில் ஒன்றரை வயது இளைய மகளை கொடூரமாக தாக்கும் வீடியோக்களை பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. படுகாயமடைந்த குழந்தை சிகிச்சைக்கு பின் குணமடைந்த விட்டதாகவும் உறவினர்களின் பராமரிப்பில் நலமாக இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon