--- --:--:-- --

ஊத்துக்குளி கொங்கு பள்ளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வள மையமாக தேர்வு

IMG_5859

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, பவர்ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் நாடகங்கள் உள்பட பல்வேறு அறிவியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு பரிசுகள் பெற்று மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. மேலும் தென்னிந்திய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

 

அதேபோல், நாசா (USA) சர்வதேச நிலா உற்று நோக்குதல் இரவு நிகழ்வை நடத்தியதுடன், இப்பள்ளியில் படிக்கும் 55 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகள் என 100 மாணவர்கள் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தங்களின் அறிவியல் திறனை மேம்படுத்தவும், விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளவும் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு கல்விஅறிவியல் சுற்றுலா சென்று வந்தனர்.

பெங்களூர் ஐஸ்கோப் நிறுவன இயக்குனர் ஆர். பாலமோகன் பேசியபோது  
பெங்களூர் ஐஸ்கோப் நிறுவன இயக்குனர் ஆர். பாலமோகன் பேசியபோது  

மேலும் வருடாவருடம் இப்பள்ளி மாணவர்கள் அறிவியல் சுற்றுலா சென்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பெங்களூர், ஐஸ்கோப் நிறுவனம் மாவட்ட அளவில் முதன் முறையாக ஊத்துக்குளி கொங்கு பள்ளியை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வள மையமாக தேர்வு செய்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வள மைய தொடக்கவிழா ஊத்துக்குளி கொங்கு பள்ளியில் நடந்தது. விழாவுக்கு கொங்கு பள்ளி தலைவர் ஏ.கே.சி. தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் ஏவி வெற்றி அடைந்ததை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் கே சிவன் மற்றும் திட்ட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாணவ மாணவிகள் தீப விளக்கு ஏற்றி வாழ்த்து தெரிவித்தனர்.

 

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூர் ஐஸ்கோப் நிறுவன இயக்குனர் ஆர். பாலமோகன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வள மையத்தை துவக்கி வைத்து வான்வெளியில் நிலாவில் நிகழும் அறிய நிகழ்வுகள், நிலவின் மேல்பகுதி மற்றும் அதன் மேல்பகுதியில் காணப்படும் மேடு, பள்ளங்கள் ஆகியவற்றை விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவர்களுக்கு தொலைநோக்கி செயல்படும் விதம் அதன் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினர். பின்னர் மாணவ மாணவிகளிடம் அறிவியல் தொடர்பான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.

திரளாக கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள்
திரளாக கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள்

இதைத்தொடர்ந்து பெங்களூர் ஐஸ்கோப் இயக்குனர் ஆர். பாலமோகன் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தியிடம் பள்ளி மாணவர்களுக்கு தேவையான டெலஸ்கோப் உள்பட பல்வேறு அறிவியல் சாதனங்களை அன்பளிப்பாக வழங்கினார். தொடர்ந்து அறிவியல் விளையாட்டு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முடிவில் பள்ளி தமிழாசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ , மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

இனிவரும் காலங்களில் அறிவியல் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே நடைபெற உள்ளது. ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவி ஏ.எஸ்.தருணிகா அறிவியல் படைப்பான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தற்பாதுகாப்பு சாதனம் மாநில அளவில் முதலிடத்தை பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon