அமெரிக்க துணை அதிபர் தேர்தல் – மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் இந்திய நேரப்படி நாளை காலை நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மைக் பென்சும், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி நாளை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து சூசன் பேஜ் வழங்க உள்ளார். சாள்கிலிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சி 9 பிரிவுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வேட்பாளர்கள் பேச பத்து நிமிடங்கள் வழங்கப்படும்.
விவாதத்தில் பங்கேற்கும் வேட்பாளர்கள் கட்சியின் சாதனைகள், வாக்குறுதிகள் கடந்த கால செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆழமாக விவாதிக்க உள்ளனர். கொரொனா பரவலை தடுக்கும் விதமாக பங்கேற்பாளர்கள் இடையில் கண்ணாடித் தடுப்பு பொருத்தப்பட உள்ளது.







