--- --:--:-- --

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கம்..!

2

ன்முறையை தூண்டும் அபாயம் இருப்பதால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்ட கும்பல் புகழ்ந்தும், தேர்தல் முடிவுகளில் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டி ட்ரம்ப் வீடியோ வெளியிட்ட அவரது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும்.

 

இந்த நிலையில் அண்மையில் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள் அவற்றின் பின்னணி, அவற்றை மற்றவர்கள் புரிந்து கொண்ட விதம் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் மேலும் வன்முறையை தூண்டும் அபாயம் இருப்பதால் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கி வைக்கப்படுவதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

டிரம்ப் அதிகாரப்பூர்வ குழுவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னை மௌனமாகி விட முடியாது எனக் கூறிய டிரம்ப் ட்விட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளத்தை தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon