--- --:--:-- --

நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய விஷப்  பாம்பு..!

3

டலூரில் வீட்டிலிருந்த நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய விஷப்  பாம்பு பிடிபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக விட்டுவிட்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் பாம்புகள் வீடுகளை நோக்கி படையெடுப்பது, இறை தேடி வீடுகளுக்குள் தஞ்சம் அடைவது நடந்து வருகிறது.

 

இது போல கம்மியம்பேட்டை பகுதியில் வீட்டில் இருந்த நாட்டுக்கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய பாம்பை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். உயிரின ஆய்வாளருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்துள்ளார்.

 

பிடித்த சில நிமிடங்களில் விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாகக் கக்கி அங்கிருந்து தப்ப முயற்சித்தது. அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon