--- --:--:-- --

இயக்குநரும் நடிகருமான அமீர் நடிப்பில் உருவாகும் நாற்காலி திரைப்படம்..!

1

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் நடிப்பில் உருவாகும் நாற்காலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அஜித் குமார் நடித்த முகவரி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் துறை.

 

அரசியல் பின்னணியில் இவர் இயக்கும் திரைப்படத்தில் இயக்குனர் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கொரொனா காரணங்களால் படத்தின் வேலைகள் தடைப்பட்டு நின்றன.

 

அந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்ட நிலையில் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தையும் இயக்குனர் துறை முழுவீச்சில் நடத்தியுள்ளார். தற்போது படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்து இருக்கின்றன.

 

படத்தொகுப்பு, இசை உள்ளிட்ட பணிகளை விரைவில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இத்திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon